யாழ் மாநகர சபை முதல்வராக சட்டத்தரணி விஸ்லிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் விட ஒரு மேலதிக வாக்குகளைப் பெற்று வி.மணிவண்ணன் தெரிவாகியுள்ளார்.
இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமான யாழ் மாநகரசபையின் அமர்வில், முதல்வரைத் தெரிவு செயவதற்கான அறிவிப்பு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்டது.
இதன் போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நியமன உறுப்பினரான சட்டத்தரணி வி.மணிவண்ணன், 21 வாக்குகளைப் பெற்று முதல்வராகத் தெரிவானார். தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான ஆனல்ட் 20 வாக்குகளைப் பெற்றார்.
தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் மகாலிங்கம் அருள்குமரன் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் 3 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 23ஆவது முதல்வராக வி.மணிவண்ணன் பதவியேற்றுள்ளார்.





