யாழ்ப்பான பல்கலைகழகத்தில் மாணவர்கள் அஞ்சலி நிகழ்வை மேற்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் பொலிசார்,இராணுவத்தினர்,புலனாய்வுப் பிரிவினர் பல்கலைகழக நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பகல் பல்கலைகழக நுழைவாயிலில் பிறந்தநாள் நிகழ்வொன்றிற்காக ஒன்றுகூடியிருந்தனர். இதன்போது அங்கு நின்ற பொலிஸார் “இங்கு குழுமியிருக்க முடியாது கலைந்து செல்லுமாறு” பொலிஸார் கூறினர். எனினும், மாணவர்கள் அதை மறுத்தபோது, போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.இதன் போது அவ்விடத்திற்கு வந்த இராணுவத்தினர் துப்பக்கிககளை மாணவர்கள் பக்கம் திருப்பி துப்பாகிகளை லோட் செய்து மிரட்டியுள்ளனர்.
அத்துடன் பல்கலைக்கழக முன்றலில் குழுமியிருந்த மாணவர்களைப் பார்த்து இங்கு நிற்பவர்கள் விடுதலைப்புலிகள் என இராணுவ சிப்பாய் கூறினார். மேலும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பேசத் தகாத வார்தைகளாலும் பேசினார். இதனால் மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டது. இதனால் பேருந்துகளில் பொலிசார் வரவழைக்கப்பட்டு பல்கலைக்கழக சூழலில் குவிக்கப்பட்டனர்.
பொலிசார் பல்கலைக்கழக முன்றலில் இருந்து விலக வேண்டும் என மாணவர்கள் கூறினர். இடையில் நீண்டநேரமாக பேச்சுவார்த்தை இடம்பெற்ற போதும் பதற்ற நிலை தணியவில்லை.
பின்னர் பல மணி நேரத்தின் பிறகு பொலிசாரும் அவ்விடத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்து இணக்கம் தெரிவித்தனர். இதனையடுத்து பதற்றநிலை தணிந்தது. எனினும் பல்கலைக்கழக சூழலில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.





