50ஆயிரம் பட்டதாரி பயிலுநர் நியமனங்களில் உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளில் ஒரு தொகுதியினருக்கான இராணுவத்தினரால் நடாத்தப்படும் தலைமைத்துவ பயிற்சிகள் பற்றிய கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கனபதிப்பிள்ளை மகேசன் தலமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரிகேடியர் ஐனக விஐயசிங்க,யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் ஜீவசுதன் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர், பட்டதாரி பயிலுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






