மருதனார்மடம் சந்தை கொத்தணி; மேலும் 5 பேருக்கு கொரோனா

மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடைய மேலும் 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று (08) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போதே 5 பேருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மூன்று பேருக்கும் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும் இவ்வாறு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.

இதன்மூலம் மருதனார்மடம் கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 156ஆக உயர்வடைந்துள்ளது.