அடுத்த இரண்டு நாட்களுக்கு வடக்கில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
10.01.2021 இரவு 7.15 இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு வடக்கு மாகாணமும் நாட்டின் பல பாகங்களும் கனமழையைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. வடமாகாணத்தில் இன்று இரவு மிகக் கன மழை கிடைக்க வாய்ப்புண்டு, என்றார்.





