இலங்கை கிரிக்கெட் அணி ஓமானுக்கு சுற்றுப்பயணம்

இலங்கை கிரிக்கெட் அணியானது ஓமான் நாட்டுக்கு இருதரப்பு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடரில் விளையாடவுள்ளது.

ஏழாவது ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதில் இலங்கை கிரிக்கெட் அணியானது ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரின் முதல் சுற்றில் நமீபியா, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளை எதிர்கொள்கிறது.

இந்நிலையிலேயே ஐ.சி.சி உலகக் கிண்ண தொடருக்கு முன்னதாக பயிற்சியாக இலங்கை அணி ஓமான் அணியுடன் இரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடரில் விளையாடுகிறது.

குறித்த போட்டிகளானது ஒக்டோபர் 7 மற்றும் 9ஆம் திகதிகளில் எமிரேட்டில் அமைந்துள்ள ஓமான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.