ஏப்ரல் 21 தாக்குதல் சூத்திரதாரிகளை வௌிப்படுத்துமாறு கோரி கறுப்புக் கொடி போராட்டம்

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் குறித்து உண்மையை வௌிப்படுத்துமாறு கோரி இன்று(21) நாடளாவிய ரீதியில் கறுப்புக் கொடி போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனை முன்னிட்டு இன்றைய தினம் அனைத்து வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் கறுப்புக் கொடியை பறக்கவிடுமாறு தேசிய கத்தோலிக்க பேச்சாளர் குழுவின் உறுப்பினர், அருட்தந்தை சிரில் காமினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதனடிப்படையில் இன்றைய தினம் அனைத்து வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டது.