நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப் பகுதியில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்புக்களை வழங்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த காலப் பகுதியில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த அனுமதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் நேற்றிரவு 10 மணி முதல், எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.





