விவசாய அமைச்சர் வடக்கிற்கு இருநாள் விஜயம்

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வடக்கிற்கு இருநாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இன்றும் நாளையும் யாழ்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் பல்வேறு இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டு விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவுள்ளார்.
அதன்படி இன்றைய தினம் அச்செழுவில் உள்ள “திராட்சை தோட்டம், விடத்தற்பபளையில் உள்ள மா, மிளகாய் தோட்டம் கிளிநொச்சியில் உள்ள யாழ் பல்கலைக்கழக விவசாயபீடம், இரணைமடு பிரதேச விவசாய ஆராச்சி நிலையம், திருவையாறு நிலக்கடலை உற்பத்தி தோட்டம் ஆகியவற்றினை பார்வையிடவுள்ளார்.
இதற்கிடையில் இன்று காலை 10 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த கமக்கார அமைப்புக்கள், விவசாயிகளுடனும் கலந்துரையாடவுள்ளார். அத்துடன் மாலை 5.00 மணியளவில் கிளி. மாவட்ட கமநல சேவை திணைக்களத்தில் கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார்.
மேலும் நாளைய தினம் நீர்வேலி வாழைப்பழத்தோட்டம் மற்றும் உருளைக்கிழங்கு தோட்டங்களிற்கும், அச்சுவேலி விலங்குகள் பண்ணைக்கும் நேரில் சென்று ஆராயவுள்ளார்.