நாட்டில் நேற்றைய தினம்(20) கொரோனா தொற்றினால் 198 பேர் மரணமடைந்துள்ளனர்.
81 பெண்களும் 117 ஆண்களும் என மொத்தமாக 198 பேர் மரணமடைந்துள்ளனர். இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிக கொரோனா மரணங்கள் இதுவாகும்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 7,183 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்றைய தினம் 3,884 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.





