கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் சடலங்கள் களுபோவில மருத்துவமனையில் குவிக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் போலி ஒளிப்படத்தை வெளியிட்டவரை கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினர் நேற்று(23) இரவு கைது செய்துள்ளனர்.
நுகேகொடையை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போட்டோசொப் மூலம் வடிவமைக்கப்பட்ட போலி ஒளிப்படத்தை கடந்த 16ஆம் திகதி சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்டார் என பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.





