நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா? அல்லது 30ம் திகதியுடன் தளர்த்துவதா? என்பது தொடர்பில் இன்றைய தினம்(27) தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி இன்றைய தினம்(27) கூடி, இந்த விடயம் தொடர்பில் ஆராயவுள்ளது.
நாட்டினினை தொடர்ந்தும் இரு வாரங்களுக்கு முடக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந் நிலையில் நாட்டின் பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு ஊரடங்கு சட்டத்தை தளர்த்த அரசு ஆலோசித்து வருவதாகவும் அத்தியாவசிய சேவைகளை தொடந்து சில கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்கவும் அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.





