டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம்

டெல்டா வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எவ்வித அறிகுறிகளும் வெளிக்காட்டாமல், மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையினுடைய மார்பு சிகிச்சை பிரிவின் வைத்திய நிபுணர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வாரத்தினுள் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 20க்கும் அதிகமானவர்களுக்கு அவசர சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததாக வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும்,

இந்த அபாயநிலை காரணமாக, எவருக்கேனும் மாரடைப்பு அடிப்படை அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், அவரை உடனடியாக மருத்துவ சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிப்பது சாலச்சிறந்தது.

நாட்டில் கொரோனா முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளின்போது, இவ்வாறான நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை. மூன்றாவது அலையின்போது தோற்றம் பெற்ற டெல்டா திரிபின் காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளது.

இவ்வாறு மாரடைப்புக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதியாகும் பெரும்பாலானோர் இளம் வயதினராக காணப்படுகின்றனர் எனவும் வைத்திய நிபுணர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.