தொழில்நுட்ப அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகிய புதிய இரு அமைச்சுககளை உருவாக்கி அதற்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டிருந்தார்.
இதன்படி, நாட்டில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுக்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரிக்கவுள்ளது இதேவேளை, மேலும் சில அமைச்சுக்களின் விடயதானங்களில் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ ஜனாதிபதி செயலணியானது ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கவுள்ளது.
அதேபோல், இலங்கை தரநிர்ணய நிறுவனம் மற்றும் ஆட் பதிவு திணைக்களம் ஆகியன தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கவுள்ளதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கிவந்த பொலிஸ் திணைக்களமும், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிய சிவில் பாதுகாப்பு திணைக்களமும் புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இனிவரும் காலங்களில் இயங்ககும் வகையில் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.





