வவுனியா-ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள வீட்டில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட 28 பேருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொதுச்சுகாதார பரிசோதகர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 24 ஆம் திகதி ஒலுமடு பட்டேபிரிந்தகுளம் கிராமத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற மரணச் சடங்கில் கலந்து கொண்ட 30 பேரில் 28 பேர் கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த மரணச் சடங்கு இடம்பெற்ற வீட்டினில் இருவருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டமையால் வவுனியா புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பி.சி.ஆர். பரிசோதனை செய்த போது குறித்த இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் குறித்த இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்து கொண்ட 30 பேருக்கு துரித அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே 28 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.





