பஹந்துடாவா நீர்வீழ்ச்சியில் அநாகரிக செயலில் ஈடுபட்ட தம்பதியினர் கைது

பலாங்கொடை பஹந்துடாவா நீர்வீழ்ச்சியில் அநாகரிக செயலில் ஈடுபட்ட தம்பதியரை குற்றப் புலனாய்வு பிரிவினர்(சிஐடி) சற்றுமுன் கைது செய்துள்ளனர்.

பலாங்கொடை பஹந்துடாவா நீர்வீழ்ச்சியில் தம்பதியினர் அநாகரிக செயலில் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளனர். இவ் வீடியோ சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.

இந் நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப் பிரிவின் ஒரு குழு நீர்வீழ்ச்சியில் அநாகரிக செயலில் ஈடுபட்ட தம்பதியரை இன்று(02) கைது செய்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)