
குஜராத் மாநில முதல்வர் பதவிக்கு பூபேந்திர பட்டேல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வர் தெரிவு நடைபெற்றது.
நேற்று(12) நடந்த பாஜக சட்டமன்ற கட்சிக் கூட்டத்தில் அவரை பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக தெரிவு செய்தனர்.
தாம் பாஜக சட்டமன்றக் கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டதை தெரிவிக்கும் கடிதத்துடன் பூபேந்திர பட்டேல் ஆளுநரை சந்திக்கவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





