நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரியை இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினார்.
நீதி அமைச்சின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற இச் சந்திப்பின் போது பல்வேறு விடையங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
இலங்கை நீதிமன்றக் கட்டமைப்பின் அபிவிருத்திக்காக சீன அரசாங்கத்தால் இதுவரை காலமும் வழங்கப்படும் ஒத்துழைப்பை எதிர்காலத்திலும் வழங்குவதாக சீனப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
நீதிமன்றக் கட்டடங்களில் நிலவும் இடப்பற்றாக்குறை மற்றும் தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதி குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.






