துப்பாக்கி சூடு எச்சரிக்கை காரணமாக அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதோடு பதற்றமான நிலவிவருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கி சூட்டு எச்சரிக்கை காரணமாக விமான நிலையத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்களை பீதியடையச் செய்து, வீதிகளில் ஓடச் செய்ததாக அதிகாரிகளையும் சாட்சிகளையும் மேற்கோள் காட்டி அந் நட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது சந்தேகநபர் சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் உடனடி விவரங்கள் எதுவும் தெளிவாக வழங்கப்படவில்லை.
இச் சம்பவம் வியாழன் இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)






