ஜயந்த கெட்டகொட நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் சத்திய பிரமாணம்!

ஜயந்த கெட்டகொட நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துக்கொண்டார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட அஜித் நிவார்ட் கப்ரால் அண்மையில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இவ்வாறு வெற்றிடமான பாராளுமன்ற ஆசனத்திற்கே, ஜயந்த கெட்டகொட இன்று(21) நியமிக்கப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)