அலரி மாளிகை மூடப்படவில்லை என்பது பொய்! என்னால் கூட செல்ல முடியவில்லை – பசில்

 

அலரி மாளிகை முடக்கப்பட்டுள்ளது. நான் கூட அங்கு சென்று பணியாற்ற முடியாதுள்ளது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகை முடப்பட்டுள்ளது என பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்த கருத்து குறித்தும் அவர் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

அலரி மாளிகை மூடப்படவில்லை என பிரதமரின் ஊடக செயலாளர் கூறியது பொய். அலரி மாளிகை முற்றாக முடக்கப்பட்டுள்ளது. என்னால் அங்குள்ள அலுவலகங்களைப் பயண்படுத்த முடியவில்லை. அந்த பகுதி முற்றாக மூடப்பட்டுள்ளது. பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுகின்றனர், என்றார்