தடைகளை கடந்து நாடாளுமன்றம் வருகிறார் ஞானசார தேரர்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை நாடாளுமன்றம் அனுப்புவதற்கும், காணாமல் போன பொதுச் செயலாளரை நீக்குவதற்கும் எங்கள் மக்கள் சக்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேலும் கட்சிகளின் முடிவுகளுக்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக தேசியப்பட்டியலுக்கு தன்னுடைய பெயரை தேர்தல்கள் ஆணையாளருக்கு பரிந்துரை செய்த எங்கள் மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் எங்கள் மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரை நாடாளுமன்றில் பதவியேற்கச் செய்துவிட்டு உடனடியாகவே பதவிவிலகச் செய்து ஞானசார தேரரை பதவியேற்கச் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.