முன்னணி, ஐதேக, பெரமுனவின் ஆதரவோடு கூட்டமைப்பின் பருத்தித்துறை பிரதேச சபை பட்ஜெட் நிறைவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து மூன்றாவது வருடமாகவும் பெரும்பான்மை வாக்குகளால் வரவு – செலவுத் திட்டம் நிறைவேறியுள்ளது.

இதற்கு ஆதரவாக 16 பேரும், எதிராக 4 பேரும் வாக்களித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 8 பேரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த 4 பேரும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த 2 பேரும், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் தலா ஓர் உறுப்பினருமாக 16 பேர் ஆதரவாக வாக்களித்தனர். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலா இரண்டு உறுப்பினர்களுமாக 4 பேர் எதிராக வாக்களித்தனர். ஈ.பி.டி.பியின் உறுப்பினர் ஒருவர் சமுகமளிக்கவில்லை.