BREAKING இலங்கையின் 16வது பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்பு

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்

இவர் நாட்டின் 16வது பிரதமர் மற்றும் மூன்றாவது பெண் பிரதமர் ஆவார். ஹரிணி அமரசூரியவிற்கு நீதி, கல்வி, தொழில், கைத்தொழில், விஞ்ஞானம், தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீடுகள் அமைச்சு பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுனாராச்சி மற்றும் விஜித ஹேரத் ஆகியோரும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.