செம்மணி மனித புதைகுழியில் இன்று இரண்டு எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றையதினம் மேலும் இரண்டு மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகளின் இரண்டாம் நாள் அகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
இதன்போதே மேலும் இரண்டு மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.