தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட குடும்பஸ்தர்

நுவரெலியா – மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தோட்டமொன்றில் நேற்று (22) 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

குறித்த நபர் தனது தாயாருடன் வாழ்ந்து வந்தவர் எனவும் அவர் வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.