மேற்குலக இராஜதந்திரிகளை சந்திக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

இலங்கையிலுள்ள முக்கிய வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினருக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பு இடம்பெறும் திகதி மற்றும் இடம் தொடர்பான விபரங்கள் பாதுகாப்பு காணங்களுக்கான வெளியிடப்பட மாட்டாது எனவும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் வடமாகாணத்திற்கு சென்ற கனேடிய உயர்ஸ்தானிகரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சந்தித்து கலந்துரையாடியதன் தொடர்ச்சியாக இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.