மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று (28) முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உள்ளது.
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மருதனார்மட சந்தையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான வியாபாரி ஒருவருடன் நேரடித் தொடர்புடைய ஒருவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மருதனார்மடம் சந்தை வர்த்தக நிலையத்தில் வியாபாரத்தில் ஈடுபடும் அவர் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன் போதே தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 110ஆக உயர்வடைந்துள்ளது.





