நாளைய மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு யாழ் வணிகர் கழகமும் ஆதரவு

யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள மனிதசங்கிலிப் போராட்டத்துக்கு அனைவரையும் பங்களிப்பு செய்யவேண்டுமென யாழ் வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

யாழ் வணிகர் கழகம் இன்று(03) மாலை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,

நாளை நடைபெறும் மனிதசங்கிலிப் போராட்டத்துக்கு அனைவரையும் பங்களிப்பு செய்யவேண்டுமென தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கட்சிகளினால் நாளையதினம்(4) மனிதச் சங்கிலிப் போராட்டம் மருதனார்மடம் சந்தியில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி முட்டாஸ் கடை சந்தியில் காலை 10 மணியளவில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.