காணொளி – https://fb.watch/nFFK-Hro4_/?mibextid=cr9u03
எதிர்வரும் 20 ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவியரீதியில் முஸ்லிம் மக்களுடனும் இணைந்து இந்த ஹர்த்தாலை பெருமெடுப்பிலே மேற்கொள்ளுவதற்கு வடக்கு – கிழக்கில் வசிக்கக்கூடிய ஒட்டுமொத்த தமிழ் மக்களினுடைய ஆதரவையும் வேண்டி நிற்கின்றோம் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்தெரிவித்தார்.
ஹர்த்தால் தொடர்பான முன்னாயர்தக் கலந்துரையாடல் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர்சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் இடம் பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் நாடாளுமன்ற(NewsCut.lk) உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களுக்கான நீதி என்பது தொடர்ந்து மறுதலிக்கப்படுகிறது என்பதை வலியுறுத்தியும், சிங்கள பௌத்தமக்கள் வாழாத தமிழ் முஸ்லிம் மக்கள் வசிக்கும் பிரதேசங்களில் தொடர்ச்சியாக காணிகள் அபகரிக்கப்பட்டுஅங்கு பௌத்த கோவில்கள் நிறுவுவதற்கான வேலைகள் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாகஇடம்பெறுகின்றது என்பதை கண்டித்தும், நிறுத்தக் கோரியும், மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல்தரைபிரச்சினைக்கு தீர்வு கோரியும் எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்தால் நடைபெறவுள்ளது.
இங்கிருந்து தொலைபேசி மூலமாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரணுடனும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுடனும் (NewsCut.lk)கலந்துபேசி உள்ளோம். எதிர்வரும்ஞாயிற்றுக்கிழமை ஹர்தால் தொடர்பான அடுத்த கட்டம் நடவடிக்கை தொடர்பாகவும் ஆராயவுள்ளோம்.
இங்கிருந்து கிழக்கு மாகாணத்துக்கு சென்று அவர்களை உற்சாகப் படுத்தும் நோக்கில் பல்வேறுதரப்பினருடனும் சந்திப்புகளை மேற்கொள்வதற்கும் தீர்மானித்துள்ளோம்.
எதிர்வரும் 20 ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவியரீதியில் முஸ்லிம் மக்களுடனும் இணைந்து இந்த ஹர்த்தாலைபெருமெடுப்புலே மேற்கொள்ளுவதற்கு வடக்கு – கிழக்கில் வசிக்கக்கூடிய ஒட்டுமொத்த தமிழ் மக்களினுடைய ஆதரவையும் (NewsCut.lk)வேண்டி நிற்கின்றோம்
தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை அரசாங்கம் வெறுமனே பார்வையாளர்களாகவே பார்க்கின்றது. இந்தஎண்ணத்தை மாற்றியமைக்கும் முகமாக ஒட்டுமொத்தமாக தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தும்முகமாகவே இந்த ஹர்தால் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
நீதிபதி சரவணராஜாவுக்கு இருந்த அச்சுறுத்தல் அவர் நாட்டை விட்டு வெளியேறியமை வெறுமனே ஒருநீதிபதிக்கான அச்சுறுத்தலாக பார்க்க முடியாது. மக்களுக்கான நீதித்துறை என்பது எவ்வளவு தூரம் இந்தசிங்கள அரசாலும் அரச இயந்திரத்தாலும் அவமதிக்கப்படுகின்றது என்ற விடையத்தையேஎடுத்துக்காட்டுகிறது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எதிராகவே குற்றப்புலனாய்வுப் பிரிவின் அறிக்கைகள் காலாகாலமாகவெளிவந்தஉள்ளது. அதுபோல்தான் நீதிபதி சரவணராஜா பற்றிய அறிக்கையும் முற்றிலும் பொய்யானதாகவேஇருக்கும். சரியான விசாரணையை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்பதை நாங்கள் உறுதியாகநம்புகின்றோம். இந்த அறிக்கையை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை
மேலும் தமிழ் கட்சிகள் (NewsCut.lk) இணைந்து இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பப்படும். மேலும் தற்பொழுது தமிழ்மக்கள் எதிர்நோக்கும பிரச்சினைகள் தொடர்பாகவும் கொழும்பில் இருக்கக்கூடிய ராஜதந்திருகளுக்கும்கடிதங்கள் அனுப்பப்படவுள்ளன. இது தொடர்பான நடவடிக்கைகளை அடுத்தடுத்த தினங்களில்மேற்கொள்ளவுள்ளோம்.
ஹர்தால் தொடர்பான முன்னாயர்தக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்றஉறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழீழவிடுதலைக் கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன், தமிழ் தேசிய கட்சியின்தலைவர் ஸ்ரீகாந்தா செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், ரெலோவின் யாழ்மாவட்ட பொறுப்பாளர் நிரோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.






