யாழ்ப்பாணத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

யாழ் மாவட்ட இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக் கனவை நனவாக்கும் முகமாக நாளையதினம் (05.07.2025) மாபெரும் வேலைவாய்ப்பு வாய்ப்பு முகாம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெறும் குறித்த வேலைவாய்ப்பு முகாமில் 30 நிறுவனங்கள் தமது நிதுவனங்களின் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கான எதிர்பார்ப்புடன் பங்கேற்கவுள்ள்ளதாக ஏற்பாட்டாளரும் Dewmas
நிறுவனத்தின் பணிப்பாளருமான
விக்னேஸ்வரன் ஐங்கரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் –

பல வேலைவாய்ப்பு சந்தைகள் நடைபெற்றாலும் இம்முறை நடைபெறும் தொழில் வாய்ப்பு முகாம் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என நம்புகின்றோம்.

அத்துடன் குறித்த முகாம் ஊடாக
முதற்கட்டமாக 150 இளைஞர் யுவதிகளுக்கு உடனடி வாய்ப்பு வழங்கப்படவுள்ளதுடன் 1000 இற்கும் அதிகமான தொழிலை எதிர்பார்போரும் வருகை தருவர் என்று அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.