இந்தியப் பிரதமருக்கான கடிதம் தயார் நிலையில்! புதன்கிழமை அனுப்ப திட்டம்

இந்திய பிரதமருக்கு எதிர்வரும் புதன்கிழமை 7 தமிழ்க் கட்சிகள் இணைந்து கடிதம் அனுப்பவுள்ளதாக தமிழ்மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்திய பிரதமருக்கு தமிழ்கட்சிகளால் அனுப்பப்படவுள்ள கடிதம் தொடர்பாக ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

இந்திய பிரதமருக்கு இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் கூட்டணி,  தமிழீழமக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, ஜனநாயகப்போராளிகள் கட்சி ஆகிய 7 தமிழ்க் கட்சிகள் கூட்டாக கடிதம் அனுப்புவது(NewsCut.lk) தொடர்பில் நேற்றைய தினமும் கலந்துரையாடியிருந்தோம். 

பிரதமருக்கு அனுப்பவுள்ள கடித்த்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. அதனை எதிர்வரும்நாட்களில் மேற்கொள்ளவுள்ளோம். எதிர்வரும் புதன்கிழமை அதற்கான கடிதத்தில் 7 கட்சித்தலைவர்களும் கையப்பமிட்டு அனுப்பவுள்ளோம் என்றார்.