யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி கலாநிதி சிவசுப்பிரமணியம் ரகுராமை முல்லைத்தீவு ஊடக அமையம் கௌரவித்துள்ளது.
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் 2ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த 22 ஆம் திகதி முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதன் போதே யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி கலாநிதி சிவசுப்பிரமணியம் ரகுராம் கௌரவிக்கப்பட்டார்.
கலாநிதி சிவசுப்பிரமணியம் ரகுராம் ஊடகவியலாளராக தனது பயணத்தை ஆரம்பித்து யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை விரிவுரையாளராக, துறைத் தலைவராக கடமையாற்றி தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதியாக உயர்வு நிலைபெற்று பணியாற்றிவரும் நிலையில் முல்லைத்தீவு ஊடக அமையம் கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







