இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் கடந்த ஜனவரி 24ம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மேலதிக சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கல்லீரல் செயலிழப்பு கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கை அரசாங்கம் அவரை இலங்கைக்கு அழைத்து வர கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து உடல் நலக்குறைவை கருத்தில் கொண்டு சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
சாந்தன் இலங்கைக்கு வருவதற்கான விமான டிக்கெட்டுக்கள் 10 நாட்களுக்குள் முன்பதிவு செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.மேலும் இலங்கை செல்வதற்கான அனுமதி கடிதத்தை திருச்சி கலெக்டருக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. இலங்கை தூதரக அதிகாரிகளிடமும் அனுமதி பெற்ற பின் சாந்தன் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்.






