புத்தாண்டை முன்னிட்டு பலப்படுத்தப்படும் பாதுகாப்பு! 7500 பொலிஸார் கடமையில்

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 7500க்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

உலகளவில் தீவிரவாத மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி எதிர்பாராத விதமாக நிகழ்கின்றமையால் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.