தமிழ்ப் பொது வேட்பாளர் யார்? யாழில் இன்று அரசியல் கட்சிகள் முக்கிய சந்திப்பு

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தற்பொழுது தமிழ்த் தேசிய கட்சிகள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந் நிலையில் பொது வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடி ஒரு பொதுவான முடிவுக்கு(NewsCut.lk) வரும் முகமாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் மாலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெறவுள்ளது.
இக் கலந்துரையாடலின் போது பொது வேட்பாளரை தெரிவு செய்வதற்கும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை (NewsCut.lk)முன்னெடுத்துச் செல்லவும் உபகுழு ஒன்று அமைக்கப்பட உள்ளதாக தெரிய வருகின்றது.
பொது வேட்பாளர் தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.