சுமத்திரனின் செயற்பாடுகளை அம்பலப்படுத்திய சிறிதரன்!

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன்  ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது,இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவின் பின்னர் சுமந்திரனிடமிருந்து ஒரு கடிதம் எனக்கு கிடைத்தது. அதற்கு நான் பதிலளிக்கவில்லை.

அதில் யாப்பு மீறல்கள் குறித்தும் நீதி வாசகங்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் குறிப்பிட்டிருந்தார்.

சுமந்திரனுடைய கடிதம் கிடைத்த போதே தனக்கு தெரியும் தனது தலைவர் பதவி நீதிமன்ற கட்டளைக்கு உட்படுத்தப்படப்போகின்றது என சிறீதரன் தெரிவித்தார்

இந்த கடிதம் ஊடகங்களில் வெளிவந்த பின்னரே எனது மின்னஞ்சல் மற்றும் வாட்ஸஅப் செயலிக்கு கிடைத்தது.

அதில் எந்த எந்த விடயங்கள் எப்படி இருக்குமென்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் வழக்கு தாக்கல் செய்யப்படும், நான் தலைவராக இயல்பாக இயங்க முடியாது என அந்த கடிதம் மூலம் ஊகித்துக்கொண்டேன்.

அதற்கு முன்னர் ஜனவரி 27 ஆம் திகதி நாங்கள் தெரிவுகளுக்கு சென்ற போது சுமத்திரன் செயலாளர் பதவியை தனக்கு தருமாறு கேட்டதும் கூட என் மனதில் கீறல்களை ஏற்படுத்தியிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

.