சுதந்திர கட்சியை மீட்டெடுப்பேன்-நீதி அமைச்சர் விஜயதாச

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின்  நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களால் பதில் தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச,கட்சியில் உறுப்புரிமை இருப்பதால்தான் பதில் தலைவராகியுள்ளேன். கட்சியை நிச்சயம் மீட்டெடுப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,நான் கைவைத்த காரியங்கள் தோல்வியில் முடிந்ததில்லை. தற்போதைய அரசில் பல கட்சிகள் உள்ளன. எனவே, சுதந்திரக் கட்சிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் எவ்வித பிரச்சினையும் கிடையாது.

எனவே,புதிய பதவியை ஏற்றுள்ளதால் அமைச்சுப் பதவி பறிபோகும் என நம்பவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.