வடக்கிற்கு பிரச்சாரத்திற்கு வரவேண்டாம்! நாமலுக்கு ஈ.பி.டி.பி எச்சரிக்கை

வடக்கு- கிழக்கு இணைப்புக்கு இடமில்லை, காணி பொலிஸ் அதிகாரம் வழங்கமாட்டோம் என்று கூறுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச வடக்கு,கிழக்கு பிரதேசங்களுக்கு தேர்தல் பிரச்சாரங்களுக்காக வரவேண்டாம் என ஈழ மக்கள் ஜனாநாயக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஜயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற இச் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.