கரவெட்டி “ராஜ கிராமம்” இன்று இரவிலிருந்து முடக்கப்படக்கூடிய சாத்தியக் கூறு காணப்படுவதாக கரவெட்டி பிரதேச சபையினர் தெரிவித்தனர்.
கரவெட்டி ராஜ கிராம பகுதியில் 70 குடும்பத்திற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று அப்பகுதியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பரிசோதனை முடிவினை பொறுத்து குறித்த பகுதி இன்று இரவிலிருந்து முடக்கப்பட கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.
பேலியகொடை மீன் சந்தைக்கு சென்ற கூலர் வாகன சாரதி, நடத்துனர்களுக்கு நேற்றைய தினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த முடக்கம் இன்று இரவிலிருந்து நடைமுறைப்படுத்தப்படலாம் எனவும் தெரிவித்தார்.





