அரசாங்கம், எதிர்க் கட்சியை மக்கள் நிராகரித்துள்ளனர் – ரணில் விக்ரமசிங்க

அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியினையும் மக்கள் நிராகரித்துள்ளனர் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் 75 ஆவது ஆண்டு பூர்த்தி தின நிகழ்வுகள் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் டிஜிட்டல் தொழிநுட்பத்தின் ஊடாக நேற்று(05) இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்,

இலங்கையை முன்னேற்ற பாதையில் இட்டு செல்வதற்கு புதிய வேலைத்திட்டங்களை ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கவுள்ளது. 2020 நாடாளுமன்ற தேர்தலில் கட்சி பாரிய பின்னடைவை சந்தித்தது.

எனினும் தோல்வி ஏற்பட்டதற்கான காரணிகள் தொடர்பில் ஆராய்ந்ததில் பல்வேறு புதிய விடயங்கள் தோன்றியுள்ளன. தற்போதைய அரசியல் முறை, தற்போதைய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியினை மக்கள் நிராகரித்துள்ளனர்.

நாடு தொடர்பில் சிந்தித்து செயலாற்றக்கூடியவர்களையே பொதுமக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)