ஆப்கான் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் உட்பட 6 அமைச்சர்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கத்துக்கான பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தலிபான் பேச்சாளர் சஃபியுல்லா முஜாஹிதின் அறிவித்துள்ளார்.

மேலும் ஆப்கானிஸ்தானை ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்’ என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதற்கமைய, ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் இடைக்கால அரசாங்கத்தின்

பிரதமர் – முல்லா மொஹம்மத் ஹஸ்ஸன் அகூந்த்
துணைத் பிரதமர் – முல்லா அப்துல் கனீ பரதர்
உள்துறை – சராஜுதின் ஹக்கானி
பாதுகாப்பு – முல்லா யாகூப்(இவர் தாலிபன் நிறுவனர் முல்லா ஒமரின் மகன்)
வெளியுறவு – ஆமிர் கான் முட்டாக்கி
வெளியுறவு துணை அமைச்சர் – அபாஸ் ஸ்டானிக்ஸாய்      ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அறிவிக்கப்பட்டவர்கள், முறைப்படி அரசு அமையும்வரை இடைக்காலமாக அமைச்சரவையை வழிநடத்துவார்கள் என்று தலிபான் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

இதேவேளை, அனைத்து இனத்தவரையும் உள்ளடக்கிய அரசாங்கமொன்று நிறுவப்படும் என தலிபான்கள் உறுதியளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)