பட்டதாரிகளின் பயிற்சிக் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீடிக்கத் திட்டம்!

அரச துறையில் சேர்க்கப்பட்டுள்ள 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கான பயிற்சி காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி இந்த முடிவை செயல்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்படவுள்ளது. அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களை அங்கீகரித்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஆள்களை நியமிக்கும் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் கேட்கப்படவுள்ளது.

அரச துறையில் சேர்க்கப்பட்டுள்ள பயிற்சியாளர்களில் 18 ஆயிரம் பேரை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. பயிற்சி காலம் அதிகாரப்பூர்வமாக இந்த மாதத்துடன் முடிவடையுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)