புதுக்குடியிருப்பு தொற்றாளியால் பலருக்கு சிக்கல்! தொடர்புபட்டோர் தொடர்புகொள்ள கோரிக்கை

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் நேற்று(26) கொரோனாத் தொற்று உறுதியானவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த தொற்றாளர் தகவல் வழங்கியதன் அடிப்படையில் அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள், மற்றும் அவர் நேற்று ஐயப்பன் கோவில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமையால் அந்த வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் ஆகியோர் குடும்பங்களுடன் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த நபர், புதுக்குடியிருப்பில் மட்டுமல்லாமல் விசுவமடு வரையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் பெருமளவானோருடன் தொடர்பிலும் இருந்துவந்துள்ளார். இதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் தொடர்புகொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுத்து வருகிறோம், எனத் தெரிவித்தார்.

 

எழுமாறான பரிசோதனையில் புதுக்குடியிருப்பு சந்தை மரக்கறி விநியோகஸ்தருக்கு கொரோனா