மருத்துவ படிப்புகள் மற்றும் மேல் படிப்புகளில் சேருவதற்கு கட்டாயமாக்கப்பட்ட “நீட்” தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா இன்று(13) பிற்பகலில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு எதிர்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவாக வாக்களித்துள்ளன. எனினும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)





