2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இந்த விடயங்கள் தொடர்பில் தௌிவுபடுத்தினார்.
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் வாரமளவில் பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதி அமைச்சர் மகிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.





