தியாகி திலீபன் நினைவிடத்தில் முன்னணி அஞ்சலி

ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி திலீபனுக்கு இன்று(15) மாலை 06 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நல்லூரில் அமைத்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்தில் சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் ஊடக பேச்சாளர் சுகாஷ் கனககரட்ணம் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்த இவர் 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி மரணம் எய்தினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)