BREAKING லொகன் ரத்வத்தவையை உடனடியாக பதவி விலகுமாறு பிரதமர் அறிவிப்பு

இராஜாங்க அமைச்சர் லொகன் ரத்வத்தவை பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு பிரதமர் தொலைபேசியின் ஊடாக அறிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலை வளாகத்தில் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக செய்திகள் வெளியாகின.

இச் சம்பவம் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

இந் நிலையில் இராஜாங்க அமைச்சர் லொகன் ரத்வத்தவை பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு பிரதமர் இத்தாலியில் இருந்து தொலைபேசியின் ஊடாக அறிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இராஜாங்க அமைச்சர் லொகன் ரத்வத்த சிறை நிர்வாகத்துறை
அமைச்சிலிருந்து விலகுவதாக தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)