யாழில் ஒரு வயது குழந்தை புரைக்கேறியதில் உயிரிழப்பு; பரிசோதனையில் கொரோனா

யாழ்ப்பாணம், பருத்தித்துறை மந்திகை ஆதார மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உடுப்பிட்டியைச் சேர்ந்த ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய குழந்தை புரைக்கேறிய நிலையில் நேற்று(15) அதிகாலை மந்திகை ஆதார மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தது.

குழந்தையின் சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)