
மதுபான விற்பனை நிலையங்கள் (வைன் ஸ்டோர்ஸ் மற்றும் பியர் விற்னை நிலையங்கள்) இன்று(17) திறந்திருந்த நிலையில் யாழ் நகரில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாது நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபான போத்தல்களை பெற்றுச் சென்றனர்.
மதுபானசாலைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் பியர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படும் விடயம் உண்மைக்கு புறம்பானது என்பதுடன் அவ்வாறு எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை என மதுவரித் திணைக்கள ஆணையாளர் தெரிவிக்கின்றார்.
எனினும் மதுபான சாலைகள் திறக்கப்பட்டு மதுபனங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. பொலிஸாரும் மதுபான சாலைகளுக்கு முன்னாள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள் (இங்கே கிளிக் செய்யுங்கள்)







